சலுகைகள் பறிக்கப்பட்டதால் பின்னலாடை ஏற்றுமதி சரிவு

தினகரன்  தினகரன்
சலுகைகள் பறிக்கப்பட்டதால் பின்னலாடை ஏற்றுமதி சரிவு

திருப்பூர்: நடப்பு நிதியாண்டில் (2019-20), வளர்ச்சியுடன் துவங்கிய இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், படிப்படியாக சரிந்து வருகிறது. ஒவ்வொரு நிதியாண்டிலும், ஜனவரி முதல் மார்ச் வரையிலான 3 மாதங்களில், ஆடை ஏற்றுமதி சிறப்பான வளர்ச்சி பெறும். ஆனால், கடந்த ஜனவரியில் ஆடை ஏற்றுமதி 4.2% சரிந்துள்ளது. 2018-19ம் நிதியாண்டு ஜனவரியில் ஆடை ஏற்றுமதி 10,801 கோடியாக இருந்தது. நடப்பு நிதியாண்டு ஜனவரியில் 10,347 கோடிக்கு மட்டுமே ஏற்றுமதி நடந்துள்ளது. கடந்த நிதியாண்டில், நாட்டின் மொத்த ஆடை ஏற்றுமதி மதிப்பு 1,12,710 கோடி; நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் ஜனவரி வரையிலான 10 மாதங்களில், 90,841 கோடியை மட்டுமே எட்டியுள்ளது. ஆயத்த ஆடை ஏற்றுமதிக்கு வழங்கப்பட்டு வந்த எம்இஐஎஸ் திட்டம் ரத்து, ஆர்ஓஎஸ்சிடிஎல் சலுகை வழங்குவதில் தாமதம் போன்ற காரணங்களால் நாட்டின் ஆடை ஏற்றுமதி வர்த்தகம் சரிவை நோக்கி செல்கிறது என இதுகுறித்து ஏஇபிசி தலைவர் சக்திவேல் கூறினார்.

மூலக்கதை