ரோபோ சங்கரின் மனைவியும் நடிகையானார்

தினமலர்  தினமலர்
ரோபோ சங்கரின் மனைவியும் நடிகையானார்

மெட்டிஒலி சீரியலில் போஸ் என்ற வேடத்தில் நடித்து பிரபலமானவர் நடிகர் போஸ் வெங்கட். அதன்பிறகும் சில சீரியல்களில் நடித்த அவர் பின்னர் சினிமாவிலும் வில்லன் மற்றும் கேரக்டர் ரோல்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகராவதற்கு முன்பு ஆட்டோ டிரைவராக இருந்த அவர், தற்போது ஆட்டோ டிரைவரின் வாழ்க்கையை மையப்படுத்தி கன்னி மாடம் என்ற படத்தை முதன் முதலாக இயக்கியிருக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக், சாயாதேவி என்ற புதுமுகங்கள் ஜோடி சேர்ந்துள்ள இந்த படத்தில் ஆடுகளம் முருகதாஸ், மைம் கோபி ஆகியோருடன் ரோபோ சங்கரின் மனைவியான பிரியங்கா ரோபோ சங்கரும் ஒரு முக்கிய கேரக்டரில்

நடித்துள்ளார்.

அந்தவகையில், ரோபோ சங்கரைத் தொடர்ந்து அவரது மகள் இந்திரஜா சங்கர், விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற கேரக்டரில் நடித்தார். அவரையடுத்து இப்போது அவரது மனைவி பிரியங்காவும் கன்னிமாடம் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார்.

மூலக்கதை