கொரோனாவின் விஸ்வரூபம்.. கதறும் ஹீரோ மோட்டோ கார்ப்.. காரணம் என்ன..!
டெல்லி: உலகம் முழுவதும் விஸ்வரூபம் எடுத்து ஆடி வரும் கொரோனாவின் தாக்கம், இந்தியா வர்த்தகத்தையும் விட்டு வைக்கவில்லை என்றே கூறலாம். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளாக சரிவையே சந்தித்து வரும் ஆட்டோமொபைல் துறை, சீனாவின் புதிய வைரஸான கொரோனாவால் மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அட சீனாவில் வைரஸ் பரவினால் இந்தியா எதற்காக, அதிலும் குறிப்பாக ஆட்டோமொபைல் துறையில் பாதிக்கப்படப் போகிறது என்று கேட்கிறீர்களா?