‘வோடபோன் ஐடியா’ ரூ. 6,439 கோடி நஷ்டம்

தினமலர்  தினமலர்
‘வோடபோன் ஐடியா’ ரூ. 6,439 கோடி நஷ்டம்

புதுடில்லி:‘வோடபோன் ஐடியா’ நிறுவனம், கடந்த டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 6,439 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.கடந்த, 2018 – 19ம் நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில், இந்நிறுவனம், 5,005 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்திருந்தது. கடந்த டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், நிறுவனத்தின் வருமானம், 5 சதவீதம் குறைந்து, 11 ஆயிரத்து, 381 கோடி ரூபாயாக உள்ளது.


இதுவே, இதற்கு முந்தைய ஆண்டின், இதே காலாண்டில், வருமானம், 11 ஆயிரத்து, 983 கோடி ரூபாயாக இருந்தது.நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை, இரண்டாவது காலாண்டில், 31.10 கோடியாக இருந்தது; மூன்றாவது காலாண்டில், 30.40 கோடியாக சரிவை கண்டுள்ளது.இருப்பினும், ஒரு வாடிக்கையாளர் மூலமாக வரும் சராசரி வருமானம், இரண்டாவது காலாண்டில், 107 ரூபாயாக இருந்தது; மூன்றாவது காலாண்டில், 109 ரூபாயாக அதிகரித்துள்ளது.


நிறுவனத்தின் மொத்த கடன், அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையையும் சேர்த்து, டிசம்பர் இறுதி நிலவரப்படி, 1.16 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. மூன்றாவது காலாண்டு அறிக்கையை தொடர்ந்து, நேற்று இந்நிறுவனத்தின் பங்குகள் விலை, 22 சதவீதத்துக்கும் மேல் சரிவை கண்டன.

மூலக்கதை