ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் பன்சால் நியமனம்

தினகரன்  தினகரன்
ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் பன்சால் நியமனம்

புதுடில்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவராக, ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜீவ் பன்சால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக மத்திய அரசின் மூத்த அதிகாரி ரஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ளது. ஏர் இந்தியா நிறுவன பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில் அதன் புதிய தலைவராக ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளார். ஏர் இந்தியா தலைமை நிர்வாக இயங்குநராக இருந்த அஸ்வானி லோகானியின் பதவிக்காலம் முடிவடைந்ததால் அப்பதவி காலியாக இருந்தது. இந்நிலையில் ஏர் இந்தியாவின் புதிய தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜீவ் பன்சால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. பன்சாலின் புதிய பதவியான ஏர் இந்தியாவின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிக்கு, நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவையின் நியமனக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. மத்திய அரசின் கூடுதல் செயலருக்கு வழங்கப்படும் ஊதியம் அவருக்கு அளிக்கப்படும். இதைத் தவிர்த்து மேலதிக தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை. 1988ம் ஆண்டு நாகலாந்து கேடர் அதிகாரியான இவர், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை