தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை : வைகோ சாடல்

தினகரன்  தினகரன்
தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை : வைகோ சாடல்

சென்னை : தமிழகத்தின் கடன் சுமை ரூ. 5 லட்சம் கோடியாக இருப்பதுதான் அதிமுக அரசின் சாதனை நிதிநிலை அறிக்கை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். வேளாண் தொழிலைப் பாதுகாக்கவும், விவசாயிகள் கோரிக்கைகளை நிறைவேற்றவும் இந்த நிதிநிலை அறிக்கையில் உருப்படியான திட்டங்கள் இல்லை என்றும் வைகோ குற்றம் சாட்டினார். மேலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான செயல் திட்டங்களோ, தொலைநோக்குப் பார்வையோ நிதிநிலை அறிக்கையில் இல்லை என்றும் 2016ல் ஜெயலலிதா முதல்வர் பதவி ஏற்றபோது, டாஸ்மாக் மதுக்கடைகள் படிப்படியாக மூடப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி அரசு குப்பைக் கூடையில் வீசி எறிந்துவிட்டது என்றும் கூறினார். 

மூலக்கதை