அண்ணாமலை பல்கலை.மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது : பாமக நிறுவனர் ராமதாஸ்

தினகரன்  தினகரன்
அண்ணாமலை பல்கலை.மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட் அறிவிப்பு வரவேற்கத்தக்கது : பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை : அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியை அரசே ஏற்று நடத்தும் என்ற பட்ஜெட்  அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.  இதன்மூலம் கடலூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி  அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வெற்றி அடைந்ததையும் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் \'அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு ரூ.500 கோடியும், காவிரி -குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிலம் எடுப்பதற்காக ரூ.700 கோடியும்  ஒதுக்கப்பட்டிருப்பது  மகிழ்ச்சியளிக்கிறது! தமிழ்நாட்டு நலனுக்காக பிற பாசனத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும்\' என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை