டிஜிட்டலில் வெளிவருகிறது ‛ரகசிய போலீஸ் 115'

தினமலர்  தினமலர்
டிஜிட்டலில் வெளிவருகிறது ‛ரகசிய போலீஸ் 115

எம்.ஜி.ஆர் நடிப்பில் 1968ம் ஆண்டு வெளிவந்த படம் ரகசிய போலீஸ் 115. ஜேம்ஸ்பாண்ட் பாணியில் எம்.ஜி.ஆர் நடித்திருந்த இந்தப் படத்தை பி.ஆர்.பந்துலு இயக்கி இருந்தார். பத்மினி பிக்சர்ஸ் சார்பில் அவரே தயாரித்தும் இருந்தார். எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா, எம்.என்.நம்பியார், எஸ்.ஏ.அசோகன், வெண்ணிற ஆடை நிர்மலா, நாகேஷ் நடித்திருந்தனர். எம்.எஸ்.விசுவநாதன் இசை அமைத்திருந்தார், வி.ராமமூர்த்தி ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படத்தை தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றி வெளியிட இருக்கிறார்கள். தற்போது அதற்கான பணி நடந்து வருகிறது. படத்தை தயாரித்த பத்மினி பிக்சர்ஸ் உடன் இணைந்து பி.சண்முகம் வெளியிடுகிறார். எம்.ஜி.ஆர் நடித்த உலகம் சுற்றும் வாலிபன், அடிமை பெண், காவல்காரன், நாடோடி மன்னன், உள்ளிட்ட பல படங்கள் ஏற்கெனவே டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மறுவெளியீடு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை