பாலிவுட்டில் கணேஷ் வெங்கட்ராம்: பொல்லாதவன் ரீமேக்கில் நடிக்கிறார்

தினமலர்  தினமலர்
பாலிவுட்டில் கணேஷ் வெங்கட்ராம்: பொல்லாதவன் ரீமேக்கில் நடிக்கிறார்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் ‛பொல்லாதவன்'. 2007ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் தற்போது கன்ஸ் ஆப் பனாரஸ் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் ஆகிறது. சேகர் சூரி இயக்குகிறார். இதில் தனுஷ் நடித்த கேரக்டரில் கரன் நாத் நடிக்கிறார், திவ்யா ஸ்பந்தனா நடித்த கேரக்டரில் நடாலியா கவுர் நடிக்கிறார். கிஷோர் நடித்த வில்லன் கேரக்டரில் அபிமன்யூசிங் நடிக்கிறார். டேனியல் பாலாஜி நடித்த துணை வில்லன் கேரக்டரில் கணேஷ் வெங்கட்ராம் நடிக்கிறார்.

வடநாட்டை சேர்ந்த கணேஷ் வெங்கட்ராம், ‛அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் குணசித்ர வேடங்களிலும், சில படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். படம் வருகிற 28ந் தேதி வெளிவருகிறது.

மூலக்கதை