தொழிலதிபராக மாறும் மஞ்சு வாரியர்

தினமலர்  தினமலர்
தொழிலதிபராக மாறும் மஞ்சு வாரியர்

மஞ்சு வாரியர் தற்போது இளம் நடிகைகளை விட பிஸியான நடிகையாக அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அசுரன், பிரதி பூவன்கோழி உள்ளிட்ட படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களிடம் பாராட்டை பெற்றது. இந்த நிலையில் லலிதம் சுந்தரம் என்ற மலையாள படத்தில் நடிக்கிறார்.

இதில் கதாநாயகனாக நடிப்பவர் இளம் நடிகர் சன்னி வெய்ன்.. இந்த படத்தை மஞ்சு வாரியாரின் தம்பி மது வாரியர் இயக்க உள்ளார் கிட்டத்தட்ட மூன்றரை வருடங்களாக இந்த கதையை உருவாக்கியுள்ளாராம் மது வாரியார். இந்த படத்தில் மஞ்சுவாரியர் ஒரு தொழிலதிபராக நடிக்கிறாராம். இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை