சென்சார் சிக்கலால் தள்ளிப்போன பஹத் பாசில் பட வெளியீடு

தினமலர்  தினமலர்
சென்சார் சிக்கலால் தள்ளிப்போன பஹத் பாசில் பட வெளியீடு

பெங்களூர் டேய்ஸ் படத்திற்கு பிறகு பஹத் பாசில் மற்றும் அவரது மனைவி நஸ்ரியா இருவரும் இணைந்து நடித்துள்ள படம் 'ட்ரான்ஸ்'. பிரபல மலையாள இயக்குனர் அன்வர் ரஷீத் இயக்கியுள்ளார். இப்படத்தில் முக்கியமான ஒரு காட்சியை நீக்குமாறு கேரள சென்சார் போர்டு அறிவுறுத்த, அதற்கு மறுத்துவிட்டார் இயக்குனர் அன்வர் ரஷீத். இதைத்தொடர்ந்து மும்பையில் உள்ள ரிவைசிங் கமிட்டி அணுகியது ட்ரான்ஸ் படக்குழு.

அதன்படி ஐதராபாத்தில் நேற்று ரிவைசிங் கமிட்டி சேர்ந்தவர்கள் இந்த படத்தை மீண்டும் பார்த்தனர். அதன்பிறகு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது. சென்சார் சிக்கலில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஏற்கனவே காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரி 14ல் வெளியாக இருந்த இந்த படம், தற்போது ஒரு வாரம் தள்ளிப்போய் பிப்ரவரி 20ல் ரிலீஸ் செய்யப்படுவதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மூலக்கதை