மோகன்லாலின் ராம் செட்டுக்கு விசிட் அடித்த பிரித்விராஜ்

தினமலர்  தினமலர்
மோகன்லாலின் ராம் செட்டுக்கு விசிட் அடித்த பிரித்விராஜ்

மோகன்லால் தற்போது ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ராம் என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார். பாலிவுட் நடிகர் அடில் உசேன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடக்கிறது. இந்த நிலையில் நடிகர் பிரித்விராஜ் ராம் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு மோகன்லாலை சந்திப்பதற்காக திடீர் விசிட் அடித்துள்ளார்.

ஏற்கனவே லூசிபர் படம் மூலம் மோகன்லாலின் மனதில் ஒரு இயக்குனராக பிரித்விராஜ் இடம்பிடித்து விட்டார். இந்த நிலையில் தான் ராம் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் படி பிரித்விராஜூக்கு மோகன்லால் அழைப்பு விடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்ல, ஏற்கனவே ஜீத்து ஜோசப் டைரக்சனில் மெமொரீஸ் என்கிற படத்தில் நடித்துள்ள பிரித்விராஜ் அந்த நட்பின் அடிப்படையில் வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

மூலக்கதை