ரஜினி - விஜய்சேதுபதி பட வாய்ப்பு : மஞ்சு வாரியர் சொல்வது என்ன

தினமலர்  தினமலர்
ரஜினி  விஜய்சேதுபதி பட வாய்ப்பு : மஞ்சு வாரியர் சொல்வது என்ன

அசுரன் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஒரு மிகச் சிறந்த நடிகையாக அடியெடுத்து வைத்துள்ளார் மலையாள நடிகை மஞ்சு வாரியர். இந்நிலையில் அவர் தமிழில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கிறார் என்று ஒரு பக்கம் செய்திகள் பரவின. இன்னொரு பக்கம் 96 படத்தில் த்ரிஷாவுக்கு பதிலாக மஞ்சு வாரியர் தான் நடிக்க இருந்தார் என்பது போன்ற செய்திகளும் பரவின. இந்த செய்திகளுக்கு சமீபத்தில் ஒரு பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார் மஞ்சு வாரியர்.

“இந்த செய்திகள் எங்கிருந்து பரவுகின்றன என்பது புதிராக இருக்கின்றது. இப்போது வரை ரஜினி பட தயாரிப்பு நிறுவனத்திலிருந்து எனக்கு எந்தவிதமான அழைப்பும் வரவில்லை. அதேபோல 96 படத்தில் என்னை நடிக்க வைப்பதற்காக என்னிடம் கதை சொல்ல சம்பந்தப்பட்டவர்கள் என்னை அணுகுவதற்கு முயற்சி செய்து வந்தார்கள் என்று பின்னாளில ஒரு விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் நான் கேள்விப்பட்டேன். அப்போது அந்தப்படம் முடிவடைந்து ரிலீஸ் ஆகிவிட்டது” என்று கூறியுள்ளார்

மூலக்கதை