சச்சின்–லாரா அணிகள் மோதல் | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
சச்சின்–லாரா அணிகள் மோதல் | பெப்ரவரி 13, 2020

மும்பை: உலக சாலை பாதுகாப்பு தொடரின் (‘ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்’) முதல் போட்டியில் சச்சின், லாரா அணிகள் மோதுகின்றன.

மஹாராஷ்டிரா அரசின் சாலை பாதுகாப்பு பிரிவு, தனியார் நிறுவனம் இணைந்து ‘ரோடு சேப்டி வேர்ல்டு சீரிஸ்’ தொடர் நடத்தவுள்ளது. இந்தியாவின் சச்சின், விண்டீசின் லாரா, இலங்கையின் முரளிதரன் உள்ளிட்ட ஓய்வு பெற்ற 110 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

இந்தியா ‘லெஜண்ட்ஸ்’, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இலங்கை, விண்டீஸ் ‘லெஜண்ட்ஸ்’ என மொத்தம் 5 அணிகள் இந்த ‘டுவென்டி–20’ தொடரில் பங்கேற்கின்றனர். வான்கடே, புனே உள்ளிட்ட இடங்களில் 11 போட்டிகள் நடக்கும். பைனல் மார்ச் 22ம் தேதி மும்பை பிரபோர்ன் மைதானத்தில் நடக்கும்.

வரும் மார்ச் 7ம் தேதி துவங்கும் முதல் போட்டியில் இந்தியா, விண்டீஸ் அணிகள் மோதுகின்றன. இந்திய அணிக்கு சச்சின், விண்டீஸ் அணிக்கு பிரையன் லாரா கேப்டன்களாக உள்ளனர். இந்திய அணியில் சேவக், யுவராஜ் சிங், ஜாகிர் கான் உள்ளிட்டோர் உள்ளனர்.

தவிர, சந்தர்பால் (விண்டீஸ்), பிரட் லீ, பிராட் ஹாட்ஜ் (ஆஸி.,), ஜான்டி ரோட்ஸ் (தெ. ஆப்.,), முரளிதரன், தில்ஷன், அஜந்தா மெண்டிஸ் (இலங்கை) என பலர் களமிறங்க காத்திருக்கின்றனர். போட்டிகள் இரவு 7:00 மணிக்குத் துவங்கும்.

மூலக்கதை