மனைவியை பிரிந்தார் மைக்கேல் கிளார்க் * காதலர் தின சோகம் | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
மனைவியை பிரிந்தார் மைக்கேல் கிளார்க் * காதலர் தின சோகம் | பெப்ரவரி 13, 2020

மெல்போர்ன்: முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், தனது மனைவி கைலே போல்டியை விவாகரத்து செய்தார்.

ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் 38. கடந்த 2015ல் சொந்தமண்ணில் உலக கோப்பை (50 ஓவர்) வென்று தந்தார். இவரது பள்ளிக்கால தோழி கைலே போல்டி, முன்னாள் மாடல் அழகி. இருவரும் காதலித்து 2012ல் திருமணம் செய்து கொண்டனர். இந்த ஜோடிக்கு கேல்சே லீ 4, என்ற மகள் உள்ளார்.

இவர்களது 7 ஆண்டுகால திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. கடந்த ஐந்து மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இவர்கள், தற்போது விவாகரத்து செய்தனர். இதற்காக ரூ. 29 கோடி வரை கிளார்க் கொடுத்துள்ளதாக தெரிகிறது.

இனிமேல் மனைவி, மகள் இணைந்து கிளார்க்கின் வாகுளோஸ் வீட்டில் வசிக்க உள்ளனர். இருவரும் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில்,‘சிறிது காலம் பிரிந்து வாழ்ந்த பின், இருவரும் நிரந்தரமாக பிரிவது என்ற கடின முடிவை எடுத்துள்ளோம். எங்கள் மகளின் வளர்ப்புக்கு இருவரும் பொறுப்பேற்றுள்ளோம்,’ என தெரிவித்துள்ளனர்.

மூலக்கதை