தோனி தான் பெஸ்ட் * சொல்கிறார் ரெய்னா | பெப்ரவரி 13, 2020

தினமலர்  தினமலர்
தோனி தான் பெஸ்ட் * சொல்கிறார் ரெய்னா | பெப்ரவரி 13, 2020

 புதுடில்லி: இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றால் அது எப்போதும் தோனி தான்,’’ என சக வீரர் ரெய்னா தெரிவித்தார்.

இந்திய அணி வீரர் ரெய்னா 33. கடந்த 2018ல் கடைசியாக இந்தியாவுக்காக களமிறங்கினார். ஐ.பி.எல்., தொடரில் தோனியின் சென்னை அணியில் இடம் பெற்றுள்ளார்.

இவர் கூறியது:

இந்திய அணியின் சிறந்த கேப்டன் என்றால் அது தோனி தான். இந்திய அணியில் எதையும் செய்ய முடியும், என, ஒட்டுமொத்தமாக மாற்றி அமைத்தவர். இவர் எங்களது சென்னை அணியில் உள்ளதால், இப்போதும் கூட எங்களது ‘டிரசிங்’ அறையில் அதே சுறுசுறுப்பு காணப்படுகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் இம்முறை அனைத்து கேலரிகளும் ரசிகர்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. கூடுதல் ரசிகர்கள் போட்டியை காண வருவர் என நம்புகிறேன். இதனால் நாங்களும் இன்னும் உற்சாகமாக களத்தில் செயல்பட வேண்டும்.

சென்னை அணியில் பியுஸ் சாவ்லா, ஹேசல்வுட், சாம் கரான், தமிழக அணிக்காக சமீபத்திய போட்டிகளில் நம்பிக்கை தரும் சாய் கிஷோர் என பல புதுமுகங்கள் உள்ளனர். ‘சீனியர், ‘ஜூனியர்’ கலந்த கலவையாக சென்னை அணி இருக்கும்.

இவ்வாறு ரெய்னா கூறினார்.

மூலக்கதை