பருவநிலை மாற்ற குழு முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி திடீர் மறைவு

தினகரன்  தினகரன்
பருவநிலை மாற்ற குழு முன்னாள் தலைவர் ஆர்.கே.பச்சோரி திடீர் மறைவு

புதுடெல்லி: சர்வதேச பருவநிலை மாற்ற குழு தலைவராக இருந்த ஆர்.கே.பச்சோரி உடல்நலக்குறைவால் இறந்தார். ஐநாவின் சர்வதேச பருவநிலை மாற்றக்குழு தலைவராக ஆர்.கே.பச்சோரி (79) இருந்தார். பின்னர் அவர் மீது பதியப்பட்ட வழக்கின் காரணமாக அவர் அப்பதவியை ராஜினாமா செய்தார். இக்குழுவானது நோபல் பரிசு ெபற்றது. நீண்ட காலமாக இதய நோய் தொடர்பாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு நேற்று தனியார் மருத்துவமனையில் இதயநோய் அறுவை சிகிச்சை நடக்க இருந்தது. இந்நிலையில் அவர் மாரடைப்பு ஏற்பட்டு அவரது வீட்டிலேயே இறந்தார். அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மூலக்கதை