மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

தினகரன்  தினகரன்
மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை திறப்பு

திருவனந்தபுரம்: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது. சபரிமலை தந்திரி கண்டரர் மகேஸ் மோகனர் முன்னிலையில் நேற்று மாலை 5 மணியளவில் மேல்சாந்தி நடை திறந்து தீபாராதனை நடத்தினார். நேற்று வேறு பூஜைகள் எதுவும் நடக்கவில்லை. இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு உஷ பூஜை உட்பட பூஜைகள் தொடங்கும். காலை 5.20 மணி முதல் 10 மணி வரை நெய்யபிஷேகம் நடக்கும். 18ம் தேதிவரை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். இன்று முதல் 18ம் தேதிவரை படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடக்கும். கோயில் நடை திறப்பை முன்னிட்டு சபரிமலையில் நேற்று ஏராளம் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

மூலக்கதை