அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி சபாநாயகர் 54 கோடி நிதி திரட்டினார்

தினகரன்  தினகரன்
அமெரிக்க செனட் சபைக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளி சபாநாயகர் 54 கோடி நிதி திரட்டினார்

வாஷிங்டன்: அமெரிக்க செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும், மைனே மாகாண சபாநாயகர் ரூ.54 கோடி தேர்தல் நிதி திரட்டியுள்ளார்.  அமெரிக்காவின் மைனே மாகாண சபாநாயகர் சாரா கிடியன். இவரது தந்தை இந்தியர். தாய் அமெரிக்காவைச் சேர்ந்தவர். அமெரிக்காவில் வரும் நவம்பரில்  நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் சார்பில் செனட் உறுப்பினர் பதவிக்கு போட்டியிட போவதாக சாரா கடந்தாண்டு ஆண்டு ஜூன் மாதம் அறிவித்தார். ஆளும் குடியரசு கட்சியின் தற்போதைய செனட் உறுப்பினர் சூசன் காலின்சை எதிர்த்து இவர் போட்டியிட உள்ளார். இதற்காக தேர்தல் நிதி திரட்டும் பணியில் சாரா இறங்கினார். கடந்த காலண்டிலேயே இவர் ரூ.21 கோடி நிதி திரட்டினார். தற்போது ரூ.54 கோடி நிதி திரட்டியுள்ளார். ஆனால், தற்போதைய செனட் உறுப்பினர் காலின்ஸ் ரூ.10.9 மில்லியன் டாலர் (ரூ.77 கோடி)  நிதி திரட்டியுள்ளார். கடந்த 7 மாதத்தில் மைனே மாகாணம் முழுவதும் சாரா பிரசாரம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து சாரா அளித்த பேட்டியில், ‘‘அமெரிக்க அரசு கார்பரேட் நிறுவனங்களுக்கு அதிக சலுகை அளிக்கிறது. அதனால், கார்பரேட் நிறுவனங்கள் அளிக்கும் தேர்தல் நிதியை ஏற்றுக் கொள்ளவில்லை,’’ என்றார்.

மூலக்கதை