‘டிவி’ இறக்குமதிக்கு கட்டுப்பாடு மத்திய அரசு ஆலோசனை

தினமலர்  தினமலர்
‘டிவி’ இறக்குமதிக்கு கட்டுப்பாடு மத்திய அரசு ஆலோசனை

புதுடில்லி:வெளிநாடுகளிலிருந்து, ‘டிவி’யை இறக்குமதி செய்வதில், கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.


இது சம்பந்தமாக, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஆகியவை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன. இந்தியாவில், கடந்த நிதியாண்டில் மட்டும், இறக்குமதி செய்யப்பட்ட, ‘டிவி’க்களின் மதிப்பு, 7,100 கோடி ரூபாய்.


இதில், சீனாவின் பங்கு மிக அதிகம். சீனாவிலிருந்து மட்டும், கடந்த நிதியாண்டில், 3,799 கோடி ரூபாய் மதிப்பிலான, ‘டிவி’க்கள் இறக்குமதி ஆகியுள்ளன.சீனாவை அடுத்து, வியட்னாம், மலேஷியா, ஹாங்காங், கொரியா, இந்தோனேஷியா, தாய்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலிருந்து அதிகம் இறக்குமதி ஆகின்றன.


அத்தியாவசியமற்ற பொருட்கள் அதிக அளவில் இறக்குமதி ஆவதை தடுக்கும் நோக்கத்துடனும், உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையிலும், இத்தகைய முயற்சிகளில் மத்திய அரசு இறங்கி உள்ளது.

மூலக்கதை