டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ தோல்விக்கு அமித்ஷா தான் காரணம்: சிவசேனா தாக்கு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜ தோல்விக்கு அமித்ஷா தான் காரணம்: சிவசேனா தாக்கு

புதுடெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் பாஜக தோற்றதற்கு அமித்ஷா தான் காரணம் என்று சிவசேனா கட்சியின் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 70 இடங்களில் 62 இடங்களை வென்ற ஆம் ஆத்மி கட்சி, மீண்டும் 3வது முறையாக ஆட்சி அமைக்கிறது.

பாஜக எட்டு  இடங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இந்த தேர்தலில் பாஜக எதிர்பார்த்ததைவிட மோசமான தோல்வியை எதிர்கொண்ட நிலையில், முன்னாள்  கூட்டாளியான சிவசேனா கட்சி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கடுமையாக சாடியுள்ளது.இதுதொடர்பாக, சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளிதழில் கூறியிருப்பதாவது: டெல்லி தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி  கட்சிக்கு கிடைத்த வெற்றி ஆச்சரியப்படக் கூடியது அல்ல. கடந்த ஐந்து ஆண்டுகளில் தேசிய தலைநகரில் மேற்கொள்ளப்பட்ட பணிகளுக்காக கெஜ்ரிவாலை  மக்கள் ஆதரித்துள்ளனர்.

ெடல்லி தேர்தலில் பாஜக தோல்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாதான் காரணம். பிரதமர் மோடி அல்ல.

அக்கட்சியின்  தேசிய தலைவராக ஜே. பி. நட்டா சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டாலும், உண்மையான தலைவராக அமித் ஷாதான் செயல்படுகிறார்.

 ஜார்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் மக்களவை தேர்தலுக்கு பின் பாஜக தோல்வியை சந்தித்தது. டெல்லியில் பாஜக-வுக்கு எதிரான அனைத்து  குற்றச்சாட்டுக்கும் அமித் ஷா தலைமை தாங்கினார்.

அவர் ஏராளமான பேரணிகளில்  உரையாற்றினார். வீடு வீடாக சென்று பிரசாரம் செய்தார்.

கட்சி  ஊழியர்களிடமிருந்தும் கருத்துக்களைப் பெற்றார். ஆனால், தோல்வியைதான் பெற முடிந்தது.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


.

மூலக்கதை