மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு: தெற்கு ரயில்வே தகவல்

சென்னை: மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ. 2,800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.   இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:தெற்கு ரயில்வேயில் தமிழ்நாட்டின் ரயில்வே உட்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு திட்டங்களுக்கு 2020-2021ம் ஆண்டில் ரூ. 2,812 கோடி ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது. 2009 முதல் 2014ம் ஆண்டு வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட ரயில்வே திட்டங்களுக்கு சாரசரி நிதி ஒதுக்கீட்டை விட இது 220 சதவீதம் அதிகம்  ஆகும்.தற்போது ரூ. 1,600 கோடி மதிப்பீட்டில் காட்பாடி - விழுப்பும் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ. 1,600 கோடி மதிப்பீட்டில் சேலம் - கரூர் - திண்டுக்கல் இரட்டை  வழிப்பாதை திட்டம், ரூ. 650 மதிப்பீட்டில் ஈரோடு - கரூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ. 2900 கோடி மதிப்பீட்டில் தருமவரம் - காட்பாடி இரட்டை வழிப்பாதை  திட்டம், ரூ. 1470 கோடி மதிப்பீட்டில் ஓசூர் - ஓமலூர் இரட்டை வழிப்பாதை திட்டம், ரூ.

278 கோடி மதிப்பீட்டில் சென்னை கடற்கரை - எழும்பூர் இரட்டை  வழிப்பாதை திட்டம் உள்ளிட்ட திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

.

மூலக்கதை