பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இணைய பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டதா?: ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் இணைய பக்கம் ‘ஹேக்’ செய்யப்பட்டதா?: ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் பரபரப்பு

பெங்களூரு: பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் (ஆர். சி. பி) அணியின் அதிகாரபூர்வ லோகோ மற்றும் இணைய வடிவமைப்புகள் சமூக ஊடகங்களில் அதிரடியாக  அகற்றப்பட்டுள்ளன. திடீரென ஆர்சிபி-யின் லோகோ அகற்றப்பட்டதால், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ‘ஹேக்’ செய்யப்பட்டதாக தகவல்கள் இணையத்தில்  பரவியது.

ஆனால், அணியின் வட்டாரத்தில் விசாரித்தபோது, ‘பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு புதிய பெயரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பது குறித்து  பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இறுதி சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

ரசிகர்கள் அதைப் பற்றி பின்னர் அறிந்து கொள்வார்கள்’ என்று  தெரிவிக்கப்பட்டது.

‘பெங்களூரு’ என்ற சொல் பெயரில் சேர்க்கப்படுமா என்று கேட்டபோது, ​‘இருக்கலாம்.

இல்லாமலும் இருக்கலாம்’ என நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர். ஐபிஎல்  2020க்கு முன்னதாக ஆர்சிபி சமீபத்தில் தனியார் நிறுவனம் ஒன்றுடன் புதிய மூன்று ஆண்டு ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

பெங்களூருவைச்  சேர்ந்த அந்த நிறுவனம், தங்களது ெபயரை லோகோவுடன் இணைக்க முயற்சித்து வருகிறது. அதனால், ஆர்சிபி-யின் ‘ஜெர்சி - ப்ரண்ட்’ லோகோ  மாறவாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

ஆர்சிபி-யில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தலைமையில் இந்த அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை