சர்வதேச மகளிர் டி20 போட்டி: நடுவராக முதல் இந்திய பெண் தேர்வு...ஐசிசி அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச மகளிர் டி20 போட்டி: நடுவராக முதல் இந்திய பெண் தேர்வு...ஐசிசி அறிவிப்பு

துபாய்: ஆஸ்திரேலியாவில் பிப். 21ம் தேதி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தொடங்குகிறது.

மொத்தமாக 23 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில்  கலந்துகொள்ளும் போட்டி அலுவலர்கள், மூன்று போட்டி நடுவர்கள், 12 நடுவர்கள் உள்ளிட்டோரின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இதில்  இந்தியாவைச் சேர்ந்த பெண் நடுவரான ஜி. எஸ். லட்சுமியின் பெயர் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் ஐசிசியால் நடத்தப்படும் சர்வதேச தொடர் ஒன்றில் போட்டி  நடுவராகப் பணியாற்றும் முதல் பெண் நடுவர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார். இவர், வரும் 22ம் தேதி பெர்த் வாகா மைதானத்தில் நடைபெறவுள்ள  வெஸ்ட் இண்டீஸ் - தாய்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியில் போட்டி நடுவராக செயல்படவுள்ளார்.

முன்னதாக இவர் கடந்தாண்டு நடைபெற்ற  ஐசிசி ஆடவர் ஒருநாள் உலகக்கோப்பை இரண்டாம் டிவிஷன் தொடரில் நடுவராகச் செயல்பட்டு, ஆடவர் போட்டிகளில் போட்டி நடுவராகச் செயல்பட்ட முதல்  பெண் நடுவர் என்ற சாதனையைப் படைத்தார்..

மூலக்கதை