சர்வதேச சிறந்த ஹாக்கி பயிற்சியாளர்கள் கொலின், அலிசனுக்கு விருது : எப்ஐஹெச் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சர்வதேச சிறந்த ஹாக்கி பயிற்சியாளர்கள் கொலின், அலிசனுக்கு விருது : எப்ஐஹெச் அறிவிப்பு

புதுடெல்லி: டச்சு மகளிர் தேசிய ஹாக்கி அணியின் பயிற்சியாளரும், ஆஸ்திரேலியாவை பூர்வீகமாக கொண்ட அலிசன் அன்னன், 2019ம் ஆண்டின் எப்ஐஹெச்  மகளிர் பயிற்சியாளர் விருதை வென்றார். இவர், மூன்றாவது முறையாக இவ்விருதை பெறுகிறார்.

நெதர்லாந்து பெண்களுக்கான தலைமை பயிற்சியாளராக  இருந்த போது, 2017  மற்றும் 2018ம் ஆண்டுகளில் விருதுகளை வென்றுள்ளார். தற்போது, 2019ம் ஆண்டுக்கான விருதையும் பெற்றுள்ளார்.   இதுகுறித்து, அலிசன் அன்னன் கூறியதாவது:
எங்கள் அனைவருக்கும் 2019ம் ஆண்டு ஒரு சவாலான ஆண்டாக இருந்தது.

நாங்கள் நிறைய கற்றுக்கொண்டோம்.

கடந்தாண்டு 10வது முறையாக யூரோஹாக்கி  நேஷன்ஸ் சாம்பியன்ஷிப்பை வென்று 2020 டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றோம்.

பயிற்சியாளர் பரிசை வென்றது ஒரு அருமையான மரியாதை.   அனைவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். 2019ம் ஆண்டில் புரோ லீக் போட்டி, ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற பல சவால், ஐரோப்பிய சாம்பியன்ஷிப்  ஆகியவற்றை எதிர்கொண்டோம்.

இந்தாண்டு எப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு போன்ற பல பெரிய போட்டிகள் வரிசையாக  இருப்பதால் அணிக்கு சவால்கள் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
 
அதேபோல் ஆண்கள் பிரிவில், ஆஸ்திரேலிய தேசிய ஹாக்கி அணி பயிற்சியாளர் கொலின் பேட்ச், 2019ம் ஆண்டின் எப்ஐஹெச் ஆண் பயிற்சியாளராக தேர்வு  செய்யப்பட்டுள்ளார்.

இவர், டிசம்பர் 2016ல் ஆஸ்திரேலியா தேசிய ஆண்கள் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முன்னதாக 2004  ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கத்தையும், 2002 மற்றும் 2006 உலகக் கோப்பைகளில் வெள்ளியையும் வென்ற ஆஸ்திரேலிய அணியின் உதவி பயிற்சியாளராக  பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை