ரகசியமாக நடந்த திருமணம் காதலியை கரம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ரகசியமாக நடந்த திருமணம் காதலியை கரம்பிடித்த மும்பை இந்தியன்ஸ் வீரர்

மும்பை: நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் மெக்லெனகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீண்டகால காதலி ஜார்ஜியாவை இங்கிலாந்தில் திருமணம்  செய்து கொண்டார். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்த நிலையில், தற்போது திருமணம் செய்து கொண்டதை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தியை  உறுதிப்படுத்தி உள்ளனர்.

ரகசியமாக திருமணம் செய்துகொண்ட இவர்கள், நட்பு வட்டத்தில் தகவல் கசிந்ததால் தற்போது தங்களது திருமணத்தை ஒப்புக்  கொண்டுள்ளனர்.
இந்தியன் பிரீமியர் லீக்கில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மிட்செல் மெக்லெனகன் விளையாடி வருகிறார்.இவர்களது திருமணத்திற்கு ஐபிஎல் தரப்பு  வாழ்த்து தெரிவித்த நிலையில், அதற்கு மெக்லெனகன் நன்றி தெரிவித்து உள்ளார். முன்னதாக மிட்செலின் காதலி ஜார்ஜியா, ஐபிஎல் சீசனின்போது இந்தியா  வந்து சென்றுள்ளார்.

தற்போது அந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியில் மெக்லெனகன் ஒரு முக்கிய  வீரராக இருந்து வருகிறார்.

மும்பை அணி 2015ல் பட்டத்தை வெல்ல முக்கிய பங்காற்றினார். இவர் 56 போட்டிகளில் விளையாடி சராசரியாக 25. 39 மற்றும் 71  விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

மூலக்கதை