முகுந்த், ஜெகதீசன் அரைசதம் * தமிழக அணி தடுமாற்றம் | பெப்ரவரி 11, 2020

தினமலர்  தினமலர்
முகுந்த், ஜெகதீசன் அரைசதம் * தமிழக அணி தடுமாற்றம் | பெப்ரவரி 11, 2020

இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடர் நடக்கிறது. ‘ஏ’, ‘பி’ பிரிவில் இருந்து குஜராத் (29), சவுராஷ்டிரா (28) அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. தமிழகம் (19 புள்ளி) அணி தனது கடைசி லீக் போட்டியில் சவுராஷ்டிராவை சந்திக்கிறது. 

ராஜ்கோட்டில் நடக்கும் இப்போட்டியில் போனஸ் புள்ளியுடன் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய தமிழக அணி, ‘டாஸ்’ வென்று பேட்டிங் தேர்வு செய்தது. சூர்ய பிரகாஷ் (10), கவுஷிக் (17), கங்கா (13) ஏமாற்றினர். அபினவ் முகுந்த் 86 ரன்கள் எடுத்து அவுட்டானார். கேப்டன் பாபா அபராஜித் 20 ரன்னுக்கு கிளம்பினார். 

ஜெகதீசன் அரைசதம் விளாசினார். சாய் கிஷோர் (27) நிலைக்கவில்லை. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் தமிழக அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 250 ரன்கள் மட்டும் எடுத்திருந்தது. ஜெகதீசன் (61), முகமது (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

பரோடாவுக்கு (85 ரன்/10 விக்.) எதிரான மற்றொரு போட்டியில் கர்நாடகா (167 ரன்/7 விக்.,), முதல் இன்னிங்சில் 80 ரன்கள் முன்னிலை பெற்றது. பெங்கால் (138/10) அணிக்கு எதிராக பஞ்சாப் (93/3) ஆதிக்கம் செலுத்துகிறது. 

ம.பி.,க்கு எதிரான போட்டியில் சர்பராஸ் கான் அவுட்டாகாமல் 169 ரன் எடுக்க, மும்பை அணி முதல் நாளில் முதல் இன்னிங்சில் 352/4 ரன்கள் குவித்தது. 


ஒரே நாளில் 490 ரன்

கோல்கட்டாவில் கோவா, மிஜோரம் மோதும் போட்டி நடக்கிறது. முதலில் களமிறங்கிய கோவா அணிக்கு ஸ்மித் படேல் 236, அமித் வர்மா 148 ரன் எடுத்து உதவ, ஒரே நாளில் 490/5 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. மிஜோரம் அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 15/1 ரன் எடுத்திருந்தது. 

மூலக்கதை