ஷபாலிக்கு சச்சின் பாராட்டு | பெப்ரவரி 12, 2020

தினமலர்  தினமலர்
ஷபாலிக்கு சச்சின் பாராட்டு | பெப்ரவரி 12, 2020

மெல்போர்ன்: இந்திய ஜாம்பவான் சச்சின், ஷபாலி வர்மாவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஷபாலி வர்மா 16. இவர், சமீபத்தில் மெல்போர்னில் இந்திய ஜாம்பவான் சச்சினை நேரில் சந்தித்தார். இதற்கான புகைப்படத்தை ஷபாலி வர்மா, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதில் ‘‘கிரிக்கெட் விளையாட்டை தேர்வு செய்ததற்கு சச்சின் தான் காரணம். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் இவரை கடவுளாக பார்க்கிறோம். கடந்த 2013ல் இவரது கடைசி ரஞ்சி கோப்பை போட்டியை நேரில் பார்த்தேன். தற்போது இவரை அருகில் சந்தித்ததன்மூலம் நீண்ட நாள் கனவு நிறைவேறியது,’’ என, பதிவிட்டிருந்தார்.

இதற்கு சச்சின், ‘டுவிட்டர்’ மூலம் பதில் தெரிவித்திருந்தார். இதில் ‘‘கனவுகள் நனவாகும் என்பதால் உங்கள் கனவுகளை தொடருங்கள். கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடனுடம், முழுமனதுடன் விளையாடுங்கள். உங்களை சந்தித்தில் மகிழ்ச்சி. நான் விளையாடிய கடைசி ரஞ்சி போட்டியை பார்த்ததாக கூறினீர்கள். தற்போது நீங்கள் இந்தியாவுக்காக விளையாடுவதை பார்க்கிறேன். வாழ்த்துக்கள்,’’ என பதிவிட்டிருந்தார்.

மூலக்கதை