மேக்ஸ்வெல் விலகல் | பெப்ரவரி 12, 2020

தினமலர்  தினமலர்
மேக்ஸ்வெல் விலகல் | பெப்ரவரி 12, 2020

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மேக்ஸ்வெல் முழங்கை காயத்துக்கு ‘ஆப்பரேஷன்’ செய்ய இருப்பதால் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். தவிர இவர், ஐ.பி.எல்., தொடரில் முழுமையாக பங்கேற்பது சந்தேகம்.

தென் ஆப்ரிக்கா செல்லவுள்ள ஆஸ்திரேலிய அணி, மூன்று ‘டுவென்டி–20’, மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் ‘டுவென்டி–20’ வரும் 21ல் ஜோகனஸ்பர்க் நகரில் நடக்கிறது. இத்தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ‘ஆல்–ரவுண்டர்’ மேக்ஸ்வெல் இடம் பிடித்திருந்தார். சமீபத்தில் முடிந்த ‘பிக் பாஷ் லீக்’ தொடரின் போது இவரது இடது முழங்கையில் வலி அதிகமானதால், விரைவில் ‘ஆப்பரேஷன்’ செய்ய உள்ளார். தவிர இவர், 6 முதல் 8 வாரம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். இவருக்கு பதிலாக ஷார்ட் சேர்க்கப்பட்டுள்ளார்.

தவிர, வரும் மார்ச் 29ல் துவங்கவுள்ள 13வது ஐ.பி.எல்., சீசனுக்கான முதல் ஒரு சில போட்டிகளில் மேக்ஸ்வெல் பங்கேற்பது சந்தேகம். இவர், பஞ்சாப் அணியில் உள்ளார்.

மூலக்கதை