இஷாந்த் சர்மாவுக்கு சோதனை | பெப்ரவரி 12, 2020

தினமலர்  தினமலர்
இஷாந்த் சர்மாவுக்கு சோதனை | பெப்ரவரி 12, 2020

 வெலிங்டன்: வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு வரும் 15ம் தேதி உடற்தகுதி தேர்வு நடக்கவுள்ளது.

இந்திய டெஸ்ட் அணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா 31. ரஞ்சி கோப்பை போட்டியில் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் நியூசிலாந்துக்கு எதிரான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டார்.

தற்போது பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். வரும் 15ம் தேதி இவருக்கு ‘பிட்னஸ்’ (உடற்தகுதி) தேர்வு நடக்க உள்ளது. இதில் தேறும் பட்சத்தில் இஷாந்த் உடனடியாக நியூசிலாந்து செல்வார்

வெலிங்டன் (பிப். 21–25), கிறைஸ்ட்சர்ச் (பிப்., 29–மார்ச் 4) டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பார் எனத் தெரிகிறது. டெஸ்ட் அணியில் முன்னணி பவுலரான இஷாந்த் வருகை, ஒருநாள் தொடரில் தடுமாறிய இந்திய அணிக்கு உற்சாகம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேறுகிறார் பாண்ட்யா

முதுகில் ‘ஆப்பரேஷன்’ செய்த ‘ஆல் ரவுண்டர்’ பாண்ட்யா, சமீபத்தில் இங்கிலாந்து சென்று ஆலோசனை பெற்றார். நாடு திரும்பிய இவர், பெங்களூரு அகாடமியில் பவுலிங் பயிற்சியை துவக்கினார். விரைவில் இந்திய அணித் தேர்வில் இடம் பெறுவர் எனத் தெரிகிறது.

மூலக்கதை