எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை: முகமது சயீத் உறுதி

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
எனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை: முகமது சயீத் உறுதி

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் குறித்து தெரிவித்த கருத்தில் உறுதியாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் முப்தி முகமது சயீத் கூறியிருக்கிறார்.

ஜம்முவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இதுதொடர்பாக வீண் சர்ச்சைகள் எழுப்பப்படுவதாக குற்றம் சாட்டினார். தேர்தல் தொடர்பாக தாம் தெரிவித்த ஆக்கப்பூர்வமான கருத்துகளை விட்டுவிட்டு இதுபோன்ற வீண் சர்ச்சைகள் எழுப்பப்படுவதாக அவர் குறை கூறினார். வாக்குச்சீட்டு தான் மக்களின் ஜனநாயகம் ‌என்பதை பாகிஸ்தானும், பிரிவினை அமைப்பான ஹூரியத்தும் புரிந்துகொண்டு அங்கீகரித்துள்ளன என்றுதான் தாம் கூறியதாக அவர் குறிப்பிட்டார். தாம் தெரிவித்த கருத்தில் மாற்றமில்லை என்றும் முதலமைச்சர் சயீத் உறுதிபடத் தெரிவித்தார். ஜம்மு-காஷ்மீரில் சுமுகமாக தேர்தல் நடத்துவதற்கு பாகிஸ்தானும், ஹூரியத் அமைப்பினரும் உகந்த சூழ்நிலையை உருவாக்கியதாக முதலமைச்சர் முப்தி முகமது சயீத் தெரிவித்திருந்தார்.

மூலக்கதை