26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை : பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தினகரன்  தினகரன்
26/11 மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை : பாகிஸ்தான் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

இஸ்லாமாபாத் : ஜமாத்-உத்-தவா தீவிரவாத இயக்கத் தலைவர் ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீது மீதான 2 வழக்குகளில் தீவிரவாத தடுப்பு நிதிமன்றம் 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் தொடரப்பட்ட வழக்குகளில் லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நிதிமன்றம் இந்த தண்டனையை வழங்கியிருக்கிறது. தீவிரவாதத்திற்கு நிதியுதவி செய்தார் என்ற புகாரின்பேரில் வழக்கு பாகிஸ்தானில் உள்ள ஜமாத் உத்தவா அமைப்பின் தலைவர் ஹபிஸ் சயீத். லஷ்கர்-இ-தொய்பா அமைப்பின் முன்னணி அமைப்பு.  கடந்த 2008ம் ஆண்டு நடந்த மும்பை தீவிரவாத தாக்குதலில் 6 அமெரிக்கர்கள் உட்பட 188 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவன் ஹபீஸ் சயீத். தீவிரவாத அமைப்புகளுக்கு எல்லாம் நிதி அளித்து வந்தான். இவனை சர்வதேச தீவிரவாதியாக அமெரிக்கா அறிவித்து, இவனது தலைக்கு ரூ.71 கோடி வெகுமதி அறிவித்தது.இந்நிலையில், தீவிரவாத அமைப்புகளுக்கு நிதி அளித்ததாக ஹபிஸ் சயீத் மீது, பாகிஸ்தானின் பஞ்சாப் காவல் துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவு 23 வழக்குகள் பதிவு செய்தது. ஹபீஸ் சயீத் கடந்தாண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். 2 வழக்குகளில் விசாரணை முடிந்ததால், அதன் தீர்ப்பை லாகூரில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்ற(ஏடிசி) நீதிபதி அர்ஷத் உசேன் புட்டா கடந்த வாரம் ஒத்தி வைத்திருந்தார்.ஹபிஸ் சயீத் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்இதனிடையே ஹபிஸ் சயீத் சார்பில் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.அதில், \'பயங்கரவாத செயல்களுக்கு நிதியுதவி செய்தது தொடர்பாக, தன் மீதும், கூட்டாளிகள் நான்கு பேர் மீதும் உள்ள, இதர நான்கு வழக்குகளின் விசாரணையை முடிக்க வேண்டும்.\'அதுவரை, விசாரணை முடிவடைந்த இரு வழக்குகளின் தீர்ப்பை தள்ளி வைக்க வேண்டும்\' என, தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த மனு, லாகூர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது, ஹபீஸ் சயீது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், இதர நான்கு வழக்குகளில், சாட்சிகளின் விசாரணையை, இன்று முதல் துவக்க உத்தரவிட்டது. இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.\'சாட்சி விசாரணை முடிந்த இரு வழக்குகளின் தீர்ப்பை உடனே வெளியிட வேண்டும்\' என, அவர் வலியுறுத்தினார். அதை நிராகரித்த நீதிமன்றம், சாட்சிகளின் குறுக்கு விசாரணையை ஒரு வாரத்திற்குள் முடிக்குமாறும், அதன் பின், ஆறு வழக்குகளின் தீர்ப்பு அறிவிக்கப்படும் எனவும் உத்தரவிட்டது. ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டு சிறைத்தணடனைஇந்நிலையில் இந்த மேற்கண்ட  2 வழக்குகளின் ஹபீஸ் சையீதுக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹபீஸ் சையீதுக்கு தலா ஒரு வழக்கில் 5.5 ஆண்டு சிறைத்தணடனை மற்றும் ரூ.15,000 அபராதத்தை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை