தேர்வறையில் சுருண்டு விழுந்து இன்ஜினியரிங் மாணவர் பலி: திருச்சூர் அருகே பரபரப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
தேர்வறையில் சுருண்டு விழுந்து இன்ஜினியரிங் மாணவர் பலி: திருச்சூர் அருகே பரபரப்பு

திருவனந்தபுரம்: தேர்வு எழுதிக்கொண்டிருந்தபோது இன்ஜினியரிங் மாணவர் சுருண்டு விழுந்து இறந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கேரள மாநிலம் கோட்டயம் மூவாற்றுமுழா பகுதியை சேர்ந்தவர் ஜோஸ். இவரது மகன் பால் (21).

திருச்சூர் அருகே கொடக்கரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 3ம் வருடம் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்தார். இவர் நேற்றிரவு வகுப்பறையில் தேர்வு எழுதிக்கொண்டிருந்தார்.

அப்போது திடீரென மயங்கி விழுந்த பாலை உடனடியாக அங்கிருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

போகும் வழியில் பால் பரிதாபமாக இறந்தார். இதுபற்றி போலீசார் விசாரிக்கின்றனர்.

.

மூலக்கதை