கொரோனா பலி 1,110 ஆக அதிகரிப்பு: 44,200 பேர் பாதிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கொரோனா பலி 1,110 ஆக அதிகரிப்பு: 44,200 பேர் பாதிப்பு

பீஜிங்: சீனாவில் கொரோனா வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,110 ஆக அதிகரித்துள்ளது. 44,200 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் ஹூபெய் மாகாண தலைநகர் வுகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.   இந்தியா, அமெரிக்கா உள்பட 28க்கும் அதிகமான நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.

இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து கொண்டே வருகின்றன.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியதில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 1,110 ஆக உயர்ந்துள்ளதாக மாகாண சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.   சீனா முழுவதும் இந்த வைரஸ் காய்ச்சலால் 44,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

.

மூலக்கதை