டெல்லி எம்எல்ஏவுக்கு வைத்த குறி தவறியது ஆம்ஆத்மி தொண்டர் சுட்டுக் கொலை: மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி எம்எல்ஏவுக்கு வைத்த குறி தவறியது ஆம்ஆத்மி தொண்டர் சுட்டுக் கொலை: மற்றொருவர் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: டெல்லியில் ஆம்ஆத்மி எம்எல்ஏவுக்கு வைத்த குறி தவறி அக்கட்சியின் ெதாண்டர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மற்றொருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு கடந்த 8ம் தேதி தேர்தல் நடைபெற்றது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டன.

ஆளும் ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 8 இடங்களை கைப்பற்றியது.

காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பதோடு, 63 இடங்களில் டெபாசிட் இழந்தது.

இந்நிலையில், மெஹரூலி தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மியின்  நரேஷ் யாதவ், கிஷன்கர் என்ற பகுதியில் இருக்கும் கோயிலுக்கு நேற்றிரவு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். கோயிலில் வழிபாடு முடிந்த பின் வானங்கள் அணிவகுக்க வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

அப்போது அவரது வாகனத்தை குறிவைத்து அடையாளம் தெரியாத நபர்கள் 7 முறை துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது.

இதில், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர் அசோக் மான் என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்எல்ஏ நரேஷ் யாதவ், காயமின்றி தப்பினார்.

கிஷன்கர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

டெல்லியில் ஆம்ஆத்மி தொண்டர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

.

மூலக்கதை