இந்திய மகளிர் அணியின் ‘ரைசிங் ஸ்டார்’ லால்ரெம்சியாமி: ஹாக்கி சம்மேளனம் வாழ்த்து

தமிழ் முரசு  தமிழ் முரசு
இந்திய மகளிர் அணியின் ‘ரைசிங் ஸ்டார்’ லால்ரெம்சியாமி: ஹாக்கி சம்மேளனம் வாழ்த்து

புதுடெல்லி: கடந்தாண்டு நவம்பரில் நடந்த எப்ஐஹெச் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணியின் ஸ்ட்ரைக்கர் லால்ரெம்சியாமியை 2019ம் ஆண்டின் ‘ரைசிங் ஸ்டார்’ என்று எப்ஐஹெச் அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டு முதல் சர்வதேச அளவில் அறிமுகமான பிறகு, லால்ரெம்சியாமி அணியில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

லால்ரெம்சியாமி அர்ஜென்டினாவின் ஜூலியட்டா ஜான்குனாஸ், சீனாவின் ஜாங்  ஜியான்கி மற்றும் நெதர்லாந்தின் ஃபிரடெரிக் மாட்லா ஆகியோருக்கு எதிராக சிறப்பாக விளையாடினார். பியூனஸ் அயர்ஸில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்  பதக்கம் வென்ற இந்தியா யு -18 அணியில் முக்கிய பங்காற்றினார்.இதுகுறித்து, இந்திய ஹாக்கி சம்மேளன தலைவர் மொஹமட் முஷ்டாக் அகமது கூறுகையில், ‘‘லால்ரெம்சியாமியை மிசோரமில் உள்ள இளைஞர்களுக்கான அடையாளமாக உள்ளார். 2018ம்ம ஆண்டின் புகழ்பெற்ற எப்ஐஎச் ரைசிங் ஸ்டார் விருதை வென்றதற்காக லால்ரெம்சியாமியை நான் வாழ்த்துகிறேன்.

அவர் அணியில் அறிமுகமானதிலிருந்து அணிக்காக மிகச் சிறப்பாக செயல்பட்டார். அவருக்கு பெரும் ஆற்றல் உள்ளது’’ என்றார்.   இதுகுறித்து, லால்ரெம்சியாமி கூறுைகயில், ‘‘இந்த விருதை வென்றதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

இது எனக்கு ஒரு பெரிய தருணம். எனக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி.

இது சிறப்பாக செயல்பட எனக்கு ஒரு பெரிய உந்துதலாக இருக்கும். எனது அணியினருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.

எனது தனிப்பட்ட போராட்டங்களின் போது அவர்கள் என்னுடன் நின்றனர்” என்றார்.

.

மூலக்கதை