கால்பந்து வீரர் நெய்மருக்கு விலா எலும்பில் காயம்...தற்போதைக்கு வாய்ப்பு மறுப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
கால்பந்து வீரர் நெய்மருக்கு விலா எலும்பில் காயம்...தற்போதைக்கு வாய்ப்பு மறுப்பு

லீட்ஸ்: மான்ட்பெல்லியருக்கு எதிராக நடந்த கால்பந்து போட்டியில் பிரேசில் வீரர் நெய்மருக்கு விலா எலும்பில் காயம் ஏற்பட்டது. அதனால், நாண்டஸ் மற்றும் லியோனுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.

நெய்மர் இல்லாத நிலையிலும், பிஎஸ்ஜி அணி நாண்டஸ் மற்றும் லியோனுக்கு எதிராக முறையே 2-1 மற்றும் 4-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது. பிஎஸ்ஜி 61 புள்ளிகளுடன் அட்டவணையில் முதலிடத்தில் உள்ளது.இரண்டாவது இடத்தில் உள்ள மார்சேயை விட 11 புள்ளிகள் முன்னிலை வகிக்கின்றது. இன்று நடைபெறும் பிரெஞ்சு கோப்பை காலிறுதியில் டிஜோன் எப்சிஓ-வை பிஎஸ்ஜி எதிர்கொள்கிறது.

இந்நிலையில், பாரிஸ் செயிண்ட்-ஜெர்மைன் மேலாளர் தாமஸ் துச்சல் கூறுைகயில், ‘‘நெய்மருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அவர் விளையாடுவது குறித்து உடனடியாக முடிவு எடுக்க முடியாது.

நாங்கள் பொறுமையுடனும், கவனமாகவும் இருக்கிறோம்.

பயிற்சிக்கு பின்னர், நெய்மர் விளையாட  முடியுமா? என்பதை பின்னர்தான் தீர்மானிக்கப் போகிறோம்” என்றார்.

.

மூலக்கதை