டெல்லி கிரிக்கெட் சங்க தேர்தல் மாஜி தேர்தல் அதிகாரி நியமனம்...டிடிசிஏ அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெல்லி கிரிக்கெட் சங்க தேர்தல் மாஜி தேர்தல் அதிகாரி நியமனம்...டிடிசிஏ அறிவிப்பு

புதுடெல்லி: இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, டெல்லி மற்றும் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் (டிடிசிஏ) தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், டிடிசிஏ-யின் தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தலை நடத்துவார்.

இதுெதாடர்பாக, டிடிசிஏ அமைப்பின் மூத்த அதிகாரி தீபக் வர்மா, அணி நிர்வாகிகளுக்கு எழுதிய கடிதத்தில், ‘டிடிசிஏ-வின் தலைவர் மற்றும் பொருளாளர் தேர்தல்களை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக நவீன் சாவ்லா நியமிக்கப்படுகிறார். பிப்.

2ம் தேதி, டிடிசிஏ அதிகாரிகளிடம்,

 இந்திய தேர்தல் ஆணையத்தில் உறுப்பினராக இருந்த நபர்களின் பட்டியலை மூன்று நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அவர்களில் ஒருவரை தேர்வு செய்ய திட்டமிடப்பட்டது.

எட்டு நாட்கள் முடிந்த பிறகும், டி. டி. சி. ஏ அதிகாரிகள் பட்டியலை அனுப்பவில்லை. அல்லது தாமதத்திற்கான எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை.

அதனால், தேர்தல் அதிகாரியாக செயல்பட நவீன் சாவ்லா விரும்புகிறாரா என்று கேட்க, சாவ்லாவுக்கு ஒரு மெயில் அனுப்பினேன். அதன்பிறகு, சாவ்லாவுடன் தொலைபேசியில் பேசினேன்.

அவர், தேர்தல் அதிகாரியாக செயல்பட ஒப்புக்கொண்டார்’ என்று அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை