பிரசவத்தின் போது சகோதரி மரணம்: சோகத்திலும் களம் கண்ட அக்பர் அலி...வங்கதேச ரசிகர்கள் பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
பிரசவத்தின் போது சகோதரி மரணம்: சோகத்திலும் களம் கண்ட அக்பர் அலி...வங்கதேச ரசிகர்கள் பாராட்டு

டாக்கா: தென்னாப்பிரிக்காவில் நடந்த 13வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் (19 வயதுக்கு உட்பட்டோர்) போட்செப்ஸ்ட்ரூமில் நடந்த இறுதி  ஆட்டத்தில் அக்பர் அலி (18) தலைமையிலான வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 4 முறை சாம்பியனான இந்திய அணியை வீழ்த்தி முதல்முறையாக  சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த வெற்றிக்கு பின்னால், கேப்டன் அக்பர் அலியின் சோகக் கதையும் உள்ளது.

இவர், தனது மூத்த சகோதரியை இழந்த  வேதனையிலும், அணியை ஒருங்கிணைத்து வெற்றிப் பெற்றுள்ளார் என்று, வங்கதேச பத்திரிகைகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

கேப்டன் அக்பர் அலியின் மூத்த சகோதரி கதீஜா கதுன் கடந்த ஜன.

22ம் தேதி, இரட்டை குழந்தைகளை பெற்றெடுக்கும் போது எதிர்பாராத விதமாக இறந்தார்.   இந்த சோக செய்தியை அக்பருக்கு அவரது குடும்பத்தினர் தெரிவிக்கவில்லை. ஆனால் அவர் தனது சகோதரர் ஒருவர் மூலம் தெரிந்து கொண்டார்.

தனது  சகோதரியின் மீது அதிக பாசம் கொண்ட அக்பர், அவரது இழப்பால் மிகவும் சோகத்தில் இருந்தார். அதனை வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

காரணம்,  சகோதரி இறந்த நேரத்தில் பாகிஸ்தானுடனான போட்டியில் பங்கேற்றிருந்ததாக அவரது தந்தை தெரிவித்தார்.

தற்போது இந்தியாவுடனான போட்டியில்  வென்றதால், அக்பர் தலைமையிலான அணியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

.

மூலக்கதை