ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் எலைஸ், வார்னருக்கு ‘லக்’: ஒரு ஓட்டில் தோற்ற ஸ்டீவ் ஸ்மித்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் எலைஸ், வார்னருக்கு ‘லக்’: ஒரு ஓட்டில் தோற்ற ஸ்டீவ் ஸ்மித்

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில், ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் விருதுகள் வழங்கப்படும். அதன்படி மெல்போர்னில் வழங்கப்பட்ட இந்த  ஆண்டுக்கான (2020) சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை டேவிட் வார்னர் ஒற்றை வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார்.

ஆலன் பார்டர் பதக்கத்தை டேவிட்  வார்னர் 194 வாக்குகள் பெற்று கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்தபடியாக ஸ்டீவ் ஸ்மித் 193 வாக்குகளும், பாட் கம்மின்ஸ் 185 வாக்குகளும் பெற்றனர்.   பெலிந்தா கிளார்க் விருதை எலைஸ் பெர்ரி இரண்டாவது முறையாகக் கைப்பற்றினார்.

சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீரராக ஆரோன் பின்ச், சிறந்த ஒருநாள் கிரிக்கெட் வீராங்கனையாக அலைஸா ஹீலி, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் வீரராக மார்னஸ்  லாபுஷேன், சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீரராக டேவிட் வார்னர், சிறந்த சர்வதேச டி20 கிரிக்கெட் வீராங்கனையாக அலைஸா ஹீலி, பெலிந்தா கிளார்க்  விருதை எலைஸ் பெர்ரி, ஆலன் பார்டர் பதக்கம் 3வது முறையாக டேவிட் வார்னருக்கும் வழங்கப்பட்டது.

இதுகுறித்து வார்னர் கூறுகையில், “இங்கே நின்று விருதைப் பெறுவதற்கு மற்ற தோழர்களின் சிறப்பான பங்களிப்பே காரணம். நான் திரும்பி வர தீராத பசியுடன்  இருந்தேன்.

என் கால்களை முன்னோக்கி பயணித்தேன். அதனால் கோடை காலம் என் முகத்தில் ஒரு புன்னகையை ஏற்படுத்தியது” என்றார்.


.

மூலக்கதை