92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகளை ‘பாராசைட்’ வென்றது

தமிழ் முரசு  தமிழ் முரசு
92வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு: சிறந்த படம் உள்ளிட்ட 4 விருதுகளை ‘பாராசைட்’ வென்றது

லாஸ் ஏஞ்சல்ஸ்: 92வது ஆஸ்கர் விருதுகள் விழா லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் இன்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தென்கொரிய படமான பாராசைட், சிறந்த படம்  உள்பட 4 விருதுகளை வென்றது. சர்வதேச அளவில் புகழ் பெற்ற ஆஸ்கர்  விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் இன்று காலை  கோலாகலமாக  தொடங்கியது.

ஹாலிவுட் கலைஞர்கள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சிகள்  நடந்தன. இதையடுத்து கடந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்   அறிவிக்கப்பட்டன.

ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதும், ஜூடி படத்தில் நடித்த ரெனே  ஸெல்விகர் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதும் வென்றனர். சிறந்த படம், சிறந்த வெளிநாட்டு திரைப்படம், சிறந்த திரைக்கதை, சிறந்த  இயக்குனர் என தென்கொரிய படம் பாராசைட் 4 ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றது.

அதன் விவரம் வருமாறு:

சிறந்த நடிகர்: ஜாக்குயின் பீனிக்ஸ் (படம்:ஜோக்கர்)
சிறந்த நடிகை: ரெனே ஸெல்விகர் (படம்:ஜூடி)
சிறந்த படம்: பாராசைட்

சிறந்த இயக்குனர்: பாங் ஜூன் ஹோ (பாராசைட்)
துணை நடிகர்: பிராட் பிட் ( படம்:ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் ஹாலிவுட்).

இவர் 2வது முறையாக ஆஸ்கர் விருது பெறுகிறார்.
துணை நடிகை: லாரா டெர்ன் (படம்: மேரேஜ் ஸ்டோரி ) இப்படத்தில் இவர் வழக்கறிஞராக நடித்திருந்தார்.
ஒளிப்பதிவு: ரோஜர் டிக்னஸ் (1917)

படத் தொகுப்பு: மாட் டாமன் மற்றும் கிரிஸ்டியன் பாலே (ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி)
ஒப்பனை, சிகை அலங்காரம் : சார்லிஸ் தெஹரன், நிக்கோல் கிட்மேன், மோர்கட் ராப்பி (பாம் ஷெல்)
பின்னணி இசை : ஜோக்கர்

அனிமேஷன் படம்: டாய் ஸ்டோரி 4ம் பாகம்
அனிமேஷன் குறும்படம்:ஹேர் லவ்
தழுவல் திரைக்கதை: ஜோ ஜோ ராபிட்.
குறும்படம்:தி நைபர்ஸ் வின்டோ

புரொடக்‌ஷன் டிசைன் விருது: லிட்டில் உமன்.
காஸ்டியும் டிசைன்: ஜாக்குலின் டுர்ரான்.
ஆவண குறும்படம்: அமெரிக்கன் பேக்டரி.
ஆவண குறும்படம்: லியர்னிங் டு ஸ்கேட்போர்ட் இன் எ வார்ஜோன்.

ஒலித்தொகுப்பு: மார்க் டெய்லர், டூவர்ட் வில்சன் (ஃபோர்ட் வெர்சஸ் ஃபெராரி)
ஒலிக்கலவை: சாம் மென்டெஸ் (1917)
விஷுவல் எபெஃக்ட்: : 1917
பாடல்: ‘ஐ ஆம் கோயிங் டு லவ்’ - எல்டன் ஜான், பெர்னி டப்பியன் (ராக்கெட் மேன்)
ஆடை வடிவமைப்பு : லிட்டில் உமன்.

.

மூலக்கதை