அப்சல் குரு உடலை ஒப்படைக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை: பாஜக கண்டனம்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
அப்சல் குரு உடலை ஒப்படைக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி கோரிக்கை: பாஜக கண்டனம்

தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் உடலை ஒப்படைக்குமாறு மக்கள் ஜனநாயகக் கட்சி கேட்பதற்கு பாரதிய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகளை மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுத்திக்கொள்ள வேண்டும் என அக்கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்துக்கு எந்த மதமும் கிடையாது என குறிப்பிட்ட அவர், அப்சல் குருவின் உடலை வழங்குமாறு கேட்பது கண்டனத்திற்குரியது என்றார். பயங்கரவாதத்தை ஒருபோதும் சகித்துக் கொள்வதில்லை என்பதே பாரதிய ஜனதாவின் நிலைப்பாடு என கூறிய அவர், பயங்கரவாதம், மனிதநேயத்துக்கு எதிரானது என குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில், நாட்டு மக்கள், பயங்கரவாதத்துக்கு எதிராக ஒன்றுபட வேண்டும் என்றும் பாரதிய ஜனதா கட்சியின் செயலாளர் ஸ்ரீகாந்த் சர்மா கேட்டுக்கொண்டார்.

மூலக்கதை