ஒரு போட்டோ பதிவிட்டதால் வந்த வம்பு என் லக்கேஜை நானே சுமந்துக்கிறேன்..! கிரிக்கெட் வீரரின் மனைவி ஆவேசம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஒரு போட்டோ பதிவிட்டதால் வந்த வம்பு என் லக்கேஜை நானே சுமந்துக்கிறேன்..! கிரிக்கெட் வீரரின் மனைவி ஆவேசம்

மும்பை: கடந்த 2014ல் இந்திய அணிக்காக அறிமுகமான ஆல் ரவுண்டர் ஸ்டுவர்ட் பின்னி,  சர்வதேச கிரிக்கெட்டில் பெரிய அளவில் சோபிக்க முடியவில்லை.   இந்திய அணிக்காக  வெறும் 6 டெஸ்ட், 14 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.   அடுத்த ஆண்டே இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டார்.   தற்போது இந்தியாவின்  உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நாகாலாந்து  அணிக்காக விளையாடி வருகிறார்.

இவரின் மனைவி மாயந்தி லாங்கர், பிரபல தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக உள்ளார்.

சமூக வலைதளமான ட்விட்டரில் தனது போட்டோ  ஒன்றை மாயந்தி பதிவிட்டிருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு அதில் பதில் அளித்திருந்தனர்.

அதில் ஒரு ரசிகர், ‘இப்போது எல்லாம் ஸ்டுவர்ட்  பின்னியை பார்க்கவே முடிவதில்லை’ என, நக்கலாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதைபார்த்து கடுப்பான மாயந்தி, தனது வழக்கமான ஸ்டைலில் அந்த ரசிகருக்கு நோஸ்கட் பதிலடி கொடுத்தார்.

அதன்படி, ட்விட்டரில் மாயந்தி அளித்துள்ள  பதிலில், ‘மிக்க நன்றி. என் லக்கேஜை நானே சுமந்து செல்வேன்.   அவர் தனது சொந்த வாழ்க்கையில் பிஷியாக உள்ளார்.

கிரிக்கெட் விளையாடுகிறார்.   எப்போதும் போல சிறப்பாக உள்ளார். அவருக்குத் தெரியாத நபர்கள் குறித்து கருத்துகளை பரிமாறமாட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இருந்தும் விடாது, அவரது  ட்விட்டர் பதிவை போட்டு இணையவாசிகள் மேலும் மாயந்தியை கடுப்பாக்கி வருகின்றனர்.


.

மூலக்கதை