மாலத்தீவு நாட்டில் பானி பூரி பரிமாறும் தோனி

தமிழ் முரசு  தமிழ் முரசு
மாலத்தீவு நாட்டில் பானி பூரி பரிமாறும் தோனி

மாேல: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி (38), இந்திய அணிக்காக களமிறங்கி ஆறு மாதங்கள் கடந்துவிட்டது. கடந்த ஆண்டு  நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கு பிறகு அவர் இந்திய அணியில் இடம்பிடிக்காமல் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகிறார்.

இதனால்,  இந்திய அணி விளையாடும் போட்டிகளில் ‘மிஸ் யூ தோனி’ என்ற பேனருடன் ரசிகர்கள் வலம் வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது மாலத்தீவில் தனது குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தோனி, சக நண்பர்களுடன் கடற்கரை ஓரத்தில் வாலிபால்  விளையாடும் வீடியோ வைரலானது.

அதேபோல், முன்னாள் இந்திய பந்துவீச்சாளரான ஆர். பி. சிங்கிற்கு அவர் பானி பூரி பரிமாறும் வீடியோ சமூக  வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் அந்த வீடியோவில் சிஎஸ்கே அணிக்காக ஐபிஎல் ஏலத்தில் தேர்வுசெய்யப்பட்ட பியூஷ் சாவ்லாவும் உடனிருந்தார்.   ஜார்கண்டில் பிறந்த கிரிக்கெட் வீரர், பானிபூரியை தயாரித்து ஒரு கரண்டியால் எடுத்து, தனது சக நண்பர்களுக்கு கொடுத்து அன்பை தோனி பரிமாறிக்  ெகாண்டதை அவரது ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.


.

மூலக்கதை