101 வயது ஹாலிவுட் நடிகர் மரணம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
101 வயது ஹாலிவுட் நடிகர் மரணம்

நியூயார்க்: பழம்பெரும் ஹாலிவுட் நடிகர் கிரிக் டக்லஸ். 1946ம் ஆண்டில் தி ஸ்டிரேன்ஞ் லவ் ஆப் மர்தல்வர்ஸ் படம் மூலம் நடிக்க வந்தவர் கிரிக்.

தொடர்ந்து  இடைவிடாமல் 2008ம் ஆண்டு வரை பல்வேறு படங்களில் நடித்திருக் கிறார். 1949ம் ஆண்டு நடித்த சேம்பியன் என்ற படம் ஆஸ்கர் விருதுக்கு நியமனம்  செய்யப்பட்டது.

கடைசியாக அவரது நடிப்பில் எம்பயர் ஸ்டேட் பில்டிங் மர்டர்ஸ் என்ற படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் கிரிக் டக்லஸ் இன்று நியூயார்க்  நகரில் உள்ள தனது வீட்டில் காலமானார்.

அவருக்கு வயது 101. கிரிக் டக்லஸ் மரணம் குறித்து அவரது மகனும் ஹாலிவுட் நடிகருமான மைக்கேல் டக்லஸ்  கூறும்போது,‘தந்தை மரணம் எங்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய இழப்பு.

இன்று எங்களைவிட்டு அவர் மறைந்துவிட்டர்’என்றார்.

.

மூலக்கதை