இலங்கையில் மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது: ஐ.நா. கூட்டத்தில் மங்கள சமரவீர கருத்து

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
இலங்கையில் மறுகட்டமைப்பு நடவடிக்கைகள் தொடங்கியுள்ளது: ஐ.நா. கூட்டத்தில் மங்கள சமரவீர கருத்து

ஜெனீவா மனித உரிமை அமைப்பின் 28 வது கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. ஐ.நா மனித உரிமை அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளைச் சேர்ந்த முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர்.

வரும் 27 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத் தொடரில் பல்வேறு நாடுகளின் மனித உரிமை விவகாரங்கள் குறித்து ஆராயப்படுகிறது. இன்றைய ஆரம்ப நிகழ்வில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரி, ஐநா சபை செயலாளர் பான் கி மூன் மற்றும் மனித உரிமை ஆணையர் செயிட் அல் ஹீசைன் ஆகியோர் உரையாற்றினர். அப்போது பேசிய ஐ.நா செயலாளர், அடிப்படை தீவிரவாதம் போன்ற சவால்களை உலகம் தற்போது சந்தித்து வருவதாகவும் இவற்றில் இருந்து மக்களை பாதுகாப்பதே தற்போதைய முக்கிய பணியாக உள்ளது என கூறினார்.

இந்த கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர பேசுகையில், இலங்கை அரசு மறுகட்டமைப்பு நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. அதிபர் இதற்காக சிறப்பு படைப்பிரிவு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.இதனால் மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு அது உடனடியாக தீர்க்கப்படும் என்றார்.

மூலக்கதை