சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு பிரிவினரிடையே மோதல்

புதிய தலைமுறை  புதிய தலைமுறை

சென்னையில் நடைபெற்ற அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்கு பிறகு இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டதால் காவல்துறையினர் லேசான தடியடி நடத்தினர்.

12 வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக குரோம்பேட்டை மாநகர போக்குவரத்து பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் 42 தொழிற்சங்கங்கள் கலந்துகொண்டன. அரசுதரப்பு பிரதிநிதிகள் உடனான இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாகவும், கோரிக்கைகள் ஏற்கபடக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வரும் 12ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து வளாகத்தில் திரண்டிருந்த அண்ணா தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் பிற தொழிற்சங்கங்க உறுப்பினர்களுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, மோதலாக உருவெடுத்தது. அப்போது இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக்கொண்டதில் 5 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காவல்துறையினர் விரைந்து செயல்பட்டு மோதலை கட்டுப்படுத்தினர். இதில், அரசு வாகனங்கள் உள்பட 8 வாகனங்கள்‌ சேதமடைந்தன.

மூலக்கதை