ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் அறிவிப்பு: சுகாதார அவசரநிலை உடனடியாக அமல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் அறிவிப்பு: சுகாதார அவசரநிலை உடனடியாக அமல்

ஜெனீவா: ஜெனீவாவில் நடந்த உலக சுகாதார மாநாட்டில் கொரோனா பலி தொடர்ந்து அதிகரித்து வருவதால், சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பு வசதி இல்லாத நாடுகளுக்கும் வேகமாக பரவுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் எதிரொலியாக சீனாவிற்கு பல நாடுகளின் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

சீனாவில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பாதிப்பால் இறந்தவர்களின் எண்ணிக்கை 213 ஆக உயர்ந்துள்ளது. தேசிய அளவில் 9,692 நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளதாக சீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

மற்ற 22 நாடுகளிலும், பிராந்தியங்களிலும் மொத்தம் 129 வழக்குகள் பதிவாகியுள்ளன. ஆனால், சீனாவுக்கு வெளியே எந்த மரணமும் அறிவிக்கப்படவில்லை.

டிசம்பர் மாதம் ஹூபேயின் தலைநகரான வுஹானில் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாததால், உலகம் முழுவதும் பரவி வருவதால், உலக சுகாதார அமைப்புக்கு பல்வேறு நாடுகளும் புகார்கள் அளித்தன.

ெதாற்றுநோய் தடுப்பு நிபுணர்களும், ஆராய்ச்சியாளர்களும் நோய் பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைக்காக உலகம் முழுவதும் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்னர். இந்நிலையில், நேற்று மாலை ஜெனீவாவில் உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

நேற்று நள்ளிரவு வரை சர்வதேச சுகாதார அவசரநிலை பிரகடனம் குறித்து, பல்வேறு நாடுகளின் உறுப்பினர்களும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

தொடர்ந்து, உலக சுகாதார அமைப்பின் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், ‘சீன நாட்டிற்கு பயணம் அல்லது வர்த்தகம் குறித்து எவ்வித கட்டுப்பாடுகளையும் பரிந்துரைக்கவில்லை; உண்மையில் உலக சுகாதார அமைப்பு எதிர்க்கவில்லை. சீனாவின் தடுப்பு நடவடிக்கைகளை பாராட்டுகிறோம்.

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், உலகளாவிய சுகாதார அவசரநிலை அறிவிக்கப்படுகிறது. ஏனெனில் இந்த வைரஸ் பாதிப்பை சமாளிக்க தேவையான பாதுகாப்பு வசதிகள் இல்லாத நாடுகளுக்கும் வேகமாக பரவுவதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

இந்த அறிவிப்புக்கு முக்கிய காரணம் சீனாவில் என்ன நடக்கிறது என்பதல்ல; மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என்பதே முக்கியம். பலவீனமான சுகாதார அமைப்புகளைக் கொண்ட நாடுகளுக்கு வைரஸ் பரவுவதற்கான சாத்தியக்கூறுதான் எங்களின் மிகப்பெரிய கவலை இருக்கிறது’’ என்றார்.

உலக சுகாதார அமைப்பின் அவசர நிலை நடவடிக்கையால், அனைத்து நாடுகளுக்கும் கட்டுப்பாடு மற்றும் தகவல் பகிர்வு வழிகாட்டுதல்களை கடைபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஆனால், சீன அரசாங்கம் இந்த வைரஸ் நோயை கட்டுப்படுத்த முடியும் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகிறது. சீனாவிற்கான அமெரிக்க தூதர் ஜாங் ஜுன் கூறுகையில், “கொரோனா வைரசை எதிர்த்துப் போராடுவதில் நாங்கள் இன்னும் மிக முக்கியமான கட்டத்தில் இருக்கிறோம்.

சர்வதேச ஒற்றுமை மிகவும் முக்கியமானது. அதற்காக அனைத்து நாடுகளும் ஒரு பொறுப்பான முறையில் நடந்து கொள்ள வேண்டும்” என்றார்.

இந்நிலையில், உலக சுகாதார அமைப்பு சர்வதேச சுகாதார அவசரநிலையை அறிவித்ததால், சீனாவுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்று அமெரிக்க அரசு அமெரிக்கர்களை எச்சரித்து உள்ளது.

இந்த அறிவிப்பு, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு விடுக்கப்படும் பயணிகளுக்கான எச்சரிக்கை போலவே சீனாவிற்கும் எச்சரிக்கையை எழுப்பி உள்ளது. இரண்டு சீன சுற்றுலாப் பயணிகளுக்கு இத்தாலியில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானதால், இத்தாலிக்கும் சீனாவிற்கும் இடையிலான அனைத்து விமான போக்குவரத்தையும் நிறுத்துவதாக இத்தாலிய பிரதமர் கியூசெப் கோன்டே கூறினார்.

பிரான்ஸ் விமான போக்குவரத்து நிறுவனம், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஜெர்மனியின் லுஃப்தான்சா மற்றும் விர்ஜின் அட்லாண்டிக் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் சீனாவின் பிரதான நகரங்களுக்கு விமானங்கள் பறப்பதை நிறுத்திவிட்டன.

ஆஸ்திரேலியாவும், சீனாவிற்கான விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தி வைக்க அழைப்பு விடுத்துள்ளது.

இவ்வாறாக பல நாடுகளின் ெதாடர்புகளில் இருந்து சீனா தனிமைப்படுத்தப்படுவதால், உலகெங்கிலும் பங்குகள் விற்பனை  வேகமாக சரிந்து வருகின்றன.

.

மூலக்கதை