சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக டெல்லியில் நடத்திய போராட்டத்தில் கலவரம்: 300 பேர் கைது

தினகரன்  தினகரன்
சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக டெல்லியில் நடத்திய போராட்டத்தில் கலவரம்: 300 பேர் கைது

டெல்லி: சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் நடந்த போராட்டத்தின் போது கலவரம் ஏற்பட்டது. பலர் காயமடைந்துள்ளனர். 300 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். மஹாராஷ்டிராவின் புனே நகரில் சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராகவும், பாரத் பந்த்திற்கு ஆதரவாகவும் பல்வேறு அமைப்புக்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக சுமார் 250க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் புனே நகரில் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். யவத்மால் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தின் போது கடையை திறந்து வைத்தவர் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். கடைக்காரர் மிளகாய் பொடியை தூவி போராட்டக்காரர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தி உள்ளார். சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு எதிராக மேற்குவங்கத்தின் முர்ஷிதாபாத்தில் நேற்று நடந்த போராட்டத்தின் போது ரகளை நடந்தது. இதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் 144 தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் சீதாமஹ்ரி பகுதியில் சிஏஏ மற்றும் என்ஆர்சி.,க்கு ஆதரவாக ஒரு தரப்பும், எதிராக ஒரு தரப்பும் போராட்டம் நடத்தினர். அப்போது இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 15 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் பதற்றத்தை தணிக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை