குவைத் பாவேந்தர் கழக பொங்கல் விழா கொண்டாட்டம்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
குவைத் பாவேந்தர் கழக பொங்கல் விழா கொண்டாட்டம்

குவைத் பாவேந்தர்  கழகம், 17-01-2020 அன்று ஃபிந்தாஸ் அரங்கில்   பொங்கல் விழாவும்,   மொழி இசை ஒளிர் விழாவும்   கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழா, பாவேந்தர் கழகத்தின் களப்பாடலுடன் தொடங்கியது.   

ஒளிர் விழாவின் முக்கிய அங்கமான குறளோடு உறவாடு” - பாவேந்தர் கழகத்தின் குழந்தை செல்வங்கள் குறள் கூறி, அதன் பொருள் விளக்கத்தை எடுத்துரைத்தனர்.

நவம்பர் மாதம் 22ந் தேதி மணவயல் பூ. காந்திமதி அம்மாள் அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய, திருக்குறள் போட்டியில்  பங்கு பெற்ற 112 குழந்தைகளுகளில் வெற்றி பெற்றக்  குழந்தைகளுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் விருந்தினராக உரைவீச்சு: பேராசிரியர். பாகை. கண்ணதாசன் M.A, M.Phil, Ph.D (சேவுகன் அண்ணாமலை பல்கலைக்கழகம்) தைத்திருநாளும், தமிழர் பண்பாடும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினராக விஜய் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் சையத் சுபாகான் இனிய பாடல்களைப் பாடினார். ஆடல் பாடலுடன் விழா இனிதே நிறைவுபெற்றது.

 

திருமதி. பாக்கியலட்சுமி வேணு

செளதி அரேபியாவில் இருந்து

மூலக்கதை